மர்டர், ஜிஸ்ம், ஜுர்ம், ராஸ், மிஸ்கைடட், வோ லாம்ஹே மற்றும் சாஹத் போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானவர் தான்மகேஷ் பட். இவர் மறைந்த நடிகை பர்வீன் பாபி மற்றும் சோனி ரஸ்தானாவுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கினார்.
மகேஷ் பட்டின் முதல் மனைவி கிரண் பட்டிற்கு பிறந்தவர் தான் பூஜா பட். 80 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர் மகேஷ் பட், ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக தனது மகள் பூஜா பட்டை மடியில் அமரவைத்து லிப் டூ லிப் கிஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மகேஷ் பட்டின் இந்த செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், முத்த சர்ச்சையை மறைக்க மகேஷ் பட் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில் டிசைன் டிசைனா விளக்கம் கொடுத்தார். ஒருகட்டத்தில் இது செய்தியாளர் சந்திப்பு என்பதை மறந்து பூஜா பட் மட்டும் என் மகளாக இல்லாமல் இருந்திருந்தால், நான் அவளைத் திருமணம் செய்திருப்பேன் என்று ஒரே போடா போட்டு அனைவரையும் முகம் சுளிக்கவைத்தார்.
தன்னை சுற்றி பல சர்ச்சை எழுந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் மது போதைக்கு அடிமையாக இருந்த பூஜா பட். மணீஷ் மகிஜாவை திருமணம் செய்து பின் அவரைவிட்டு பிரிந்தார். தற்போது மது போதையில் இருந்து விடுபட்டு இந்தி பிக்பாஸ் OTT 2 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பூஜா, மணீஷ் மகிஜாவுடன் 11 ஆண்டு காலம் வாழ்ந்து இருக்கிறேன். அவர் ஒரு நல்ல மனிதர் என்றார். மேலும், நான் குழந்தைகளை நேசிக்கிறேன், ஆனால் நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றார்.
Listen News!