• Jul 25 2025

தனது அப்பாவை மன்னித்து ஏற்றுக் கொண்ட தமிழ்- தோற்றுப்போன ஆவேசத்தில் இருக்கும் கோதை- குஷியில் சரஸ்வதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதி, சந்திரகலாவிடம் எப்படி தமிழ் ஜெயிச்சார் என்ற உண்மையைச் சொல்லுகின்றார். அதில் தமிழின் அப்பா நடேசன் தமிழ் நல்லவன் அவன் மேல விழுந்தது ஒரு பழி மடடும் தான், ஒருத்தன் தப்பே பண்ணல என்று ஒரு நிரூபிச்சுக் கொண்டு இருக்கனுமா என தமிழுக்கு ஆதரவாகப் பேசி ஓர் வீடியோவை வெளியிட்டதால் தான் கடைசி நேரத்தில மற்றவங்க ஓட்டுப் போட்டாங்க என்று சொல்கின்றார்.


இதனால் குஷியான சந்திரகலா சம்மந்தி இப்படி சீக்கிரமே மனசு மாறுவார் என்று நான் நினைக்கவே இல்லை. இவரைப் போல கோதையும் சீக்கிரம் மனசு மாறிடுவாங்க என்று சொல்ல தமிழ் எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை என தமிழ் சொல்கின்றார். இந்த நேரம் வசு போன் செய்து தமிழுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.

அப்போது சரஸ்வதி குழந்தையைப் பார்க்க மாட்டேன் என்று சொல்ல சந்திரகலா ஏன் என்று கேட்க வசு, சரஸ்வதி குழந்தையை துாக்கினதால தான் குழந்தைக்கு அன்டைக்கு வருத்தம் வந்திச்சு என்று கதையைக் கட்டி விட்டாங்க, அதனால தான் சரஸ்வதி குழந்தையை பார்க்கிறதே இல்லை எனச் சொல்கின்றார்.

தொடர்ந்து தமிழும் குழந்தையை பார்க்க வேணாம் என்று சொல்ல சந்திரகலா இருவரையும் சமாதானப்படுத்துகின்றார்.மறுபுறம் கோதை ரூமுக்குள் இருந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது நடேசன் சமாதானப்படுத்துகின்றார். நீ நிறைய நல்லது பண்ணி இருக்கிற நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிற இந்த ஒரு விஷயத்திற்காக எதுக்கு கவலைப்படுற என்று கேட்கின்றார்.


பின்னர் நடேசன் தமிழைப்பார்ப்பதற்காக வீட்டிற்கு வர தமிழ் தன்னுடைய கையால் ஸ்வீட் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க நடேசன் கட்டிப்பிடித்து அழுகின்றார். பின்னர் உன்னை ஒரு முறை நம்பாமல் நீ வீட்டை விட்டுப் போறதுக்கு நானும் காரணமாகிட்டேன். நீ என் பையன்டா ஜெயிக்காமல் போனால் அது எனக்கும் தான் தான்டா கஷ்டம் என சொல்லி கதைக்க சரஸ்வதி ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement