• Jul 25 2025

பிடிக்காத ஒருவர் என்றால் இந்த பொண்ணு மட்டும் தான்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஏடிகே கொடுத்த முதல் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டி உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், மைனா, ஷிவின், அமுதவாணன் ஆகிய 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் யார் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.

இந்தத நிலையில் எவிக்ஷனில் கடந்த வாரம் வெளியேறிய ஏடிகே முதல் முறைறயாக நேர்காணலில் வந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. பிக்பாஸ் ஜேர்னி ரொம்ப நல்லா இருக்கு. நான் எதிர்பார்க்காத விடயம் இது. என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டேன் என நம்புகின்றேன். அதே போல வெளியல் வந்த நல்லா சாப்பிட்டேன்.உடல் வலி எல்லாம் குறைஞ்சிருக்கு. எல்லோரக்கும் என்னை அடையாளம் தெரியுது அதை பார்க்கும் போது சந்தொஷமாக இருக்கு என்று கூறினார்.


மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் யாரைப் பிடிக்கும் என்று கேட்ட போது விக்ரமன் அசீம் ராம் மணிகண்டன் இவங்களை தான் ரொம்ப பிடிக்கும். இந்த நாலு பேரும் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானவங்க தான். அதே போல பிடிக்காதவங்க யார் என்றால் அது தனலக்ஷ்மி தான் அவ சின்ன பொண்ணு தான் ஆனால் கேம்ல அவங்க நடந்து கொண்ட விதங்கள் எதுவும் எனக்கு பிடிக்கல,ஆனால் தனிப்பட்ட ரீதியில் அவளுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.


அதே போல கதிரவன் பணப் பெட்டியுடன் வெளியேறியது குறித்து கேட்ட போது அவர் காசுக்காக அதை எடுக்கல வெளியில வர வேண்டும் என்பதற்காகவே அந்த பணப் பெட்டியை எடுத்திருக்கிறார் என்று கூறினார்.மேலும் தலைமுடி வெட்டினது என்னோட சுய விருப்பத்தோடு தான் செய்தேன். எனக்கு எப்போது முழுசாக வெட்டோனும் என்று தோணுதோ அப்ப வெட்டுவேன. அத்தோடு எனக்கு ஊர்க்கிழவி என்று பெயர் வச்சிருக்கிறாங்க. அந்த பெரை வச்சு நதன் கட்டிப்பாக பாட்டு எழுதுவேன் என்றும் கூறினார்.மேலும் எனக்கு சர்ப்போட் பண்ணின எல்லாருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement