• Jul 25 2025

எங்களை பார்த்தால் அவுங்களுக்கு பிடிக்கல.. மனம் உருகி பேசிய நரிக்குறவர் மக்கள் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் என்று வெளியானது.மேலும்  இப்படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் பத்து தல படத்தை பார்க்க சென்ற நரிக்குறவர் மக்களுக்கு ரோகினி தியேட்டரில் அனுமதி மறுக்கப்பட்டது.

 மேலும் இது குறித்து வீடியோ சோசியல் மீடியாவில்  வேகமாக பரவியது. இதற்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இவ்வாறுஇருக்கையில் இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள், "பத்து தல படத்தை பார்க்க ஆசையாக வந்தோம் ஆனால் படத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

 மேலும் விஜய், அஜித் படத்திற்கும் இது போன்று தான் எங்களுக்கு நடந்தது. அவுங்களுக்கு எங்களை பார்த்தால் பிடிக்கவில்லை போல" என்று உருக்கமாக நரிக்குறவர் மக்கள் பேசியுள்ளனர்.


Advertisement

Advertisement