• Jul 24 2025

நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா'.. பட்டையைக் கிளப்பியதா..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

புதுமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் என்பவரின் இயக்கத்தில் 'தசரா' படம் வெளியாகி இருக்கின்றது. இதில் நடிகர் நானி தரணி எனும் கதாப்பாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கின்றனர்.


அதுமட்டுமல்லாது இவர்களோடு இணைந்து சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரிணா வஹாப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தை சுற்றி நிகழும் கதையாக அமைந்துள்ளது.


இந்நிலையில் இப்படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் தசரா படத்தின் முதல் பாதி மாஸாக இருந்ததாகவும், இடைவேளைக்கு முந்தைய பகுதி திருப்திகரமாக இல்லை என்றும் ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு இன்னொரு ரசிகர் இடைவேளை காட்சிதான் மாஸாக இருந்ததாக பதிவிட்டுள்ளார். 


அதேபோல் தசரா படத்தினை ஸ்ரீகாந்த் எனும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார், இவரையும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களையும் வெகுவாக பாராட்டி சிலர் ட்வீட் செய்து வருகின்றனர். 


அதுமட்டுமல்லாது தசரா படத்தின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்துமே படத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தியுள்ளதாக ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒரு ரசிகர் படம் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும், நானி இப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாகவும் தனது ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இவ்வாறாக தசரா படமானது பல பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.


Advertisement

Advertisement