• Jul 23 2025

படிக்கவில்லை எனில் பிச்சை தான் எடுக்கணும். படிப்பு இல்லை என்றால் நாடு எப்படி வளரும் படிப்பு தான் வாழ்க்கை. _ பொங்கி எழும் சாமனியர்கள்! பிக்பாஸூக்கு பதிலடி

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும்  விறுப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சி தான் பிக்பாஸ் , தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது.


அந்தவகையில் கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் விசித்திரா மற்றும் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையில் பஞ்சாயத்து ஒன்று  ஏற்பட்டுள்ளது.  அதில் ஜோவிகாவின் படிப்பை இழுத்து பேசிய விசித்திராவின் வாயை ஒரே வார்த்தையால் ஜோவிகா மூடியுள்ளார்.  இதனை தொடந்து  வார இறுதியில்  கமல்ஹாசன் இதனை பற்றி நேரடியாக பேசியிருந்தார் அப்போது படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது" என ஜோவிகாவுக்கு சார்பாக  கதைத்திருந்தார். அத்தோடு பவாவும் ஜோவிகவுக்கு சார்பாகவே கதைத்திருந்தார். இது மக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெண் ஒருவர் படிக்க வேணாம்னு சொல்ல கமல்ஹாசன் யாரு? படிக்காதன்னு சொல்ல  என்ன உரிமை இருக்கு?  படிக்கலைனா பிச்சை தான் எடுக்கணும். படிப்பு இல்லை என்றால் நாடு எப்படி வளரும் படிப்பு தான் வாழ்க்கை. அந்த புள்ளை ஜோவிகா நீட் தேர்வை பற்றி எல்லாம் கதைக்கிறா, அதுக்கு என்னசம்பந்தம் இருக்கின்றது. படிக்காம நீட் தேர்வை பற்றி கதைப்பது தவறு. பவா செல்லத்துரைக்கு படிப்பை பற்றி தெரியவில்லை, அவர் ஒரு எழுத்தாளர் தானே பின்னர் எப்படி படிப்பு தேவை இல்லை என சொல்லலாம். பிக்பாஸ் பார்த்தாலே பிள்ளைங்க கெட்டுப்போய்டும். பெத்தவங்க இதையெல்லாம் பார்க்க பிள்ளைகளை  அனுமதிக்கவே  கூடாது என பொது வெளியில் பெண் ஒருவர் பிரபல ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

https://twitter.com/Satheesh_2017/status/1712492933566562314?t=Mt8RMkQQW4ysWis8UgUcwA&s=19

Advertisement

Advertisement