• Jul 23 2025

என்னை விட்டிருந்தால் ராஷ்மிகாவை விட நல்லாவே பண்ணியிருப்பேன்- ஓபனாக பேசி சிக்கிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது  நடிப்பில் அண்மையில் ஃபர்ஹானா என்ற படம் திரைக்கு வந்திருந்தது. அது இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக இருக்கிறது என தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

சில இடங்களில் எதிர்ப்பு காரணமாக படகாட்சிகளும் நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியானது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறதாம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில் தான் தெலுங்கில் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாக கூறி இருக்கிறார்.புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் உடனே ஒப்புக்கொண்டிருப்பேன். ராஷ்மிகாவை விட நான் அந்த ரோலில் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருக்கிறார்.  


இவரின் இந்தப் பதிலைக் கேட்ட பலரும் ராஷ்மிகாவை வம்புக்கு இழுக்கிறீங்களா மேடம் என்று கேட்டு வருகின்றனர். இது தவிர இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய சொப்பன சுந்தரி திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement