• Jul 25 2025

இனியா ஸ்கூலில் வைத்து கோபியிடம் சண்டை பிடித்து அவமானப்படுத்திய ராதிகா- சந்தோஷத்தில் இருக்கும் பாக்கியா- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கோபி ராதிகா இருவரும் பாக்கியா வீட்டில் இருப்பதால் அடிக்கடி பாக்கியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர ஈஸ்வரி ராதிகாவைக் கண்டாலே வம்புக்கு ஏதாவது செய்து வருகின்றார். இது ஒரு புறம் இருக்க பாக்கியாவுக்கும் பழனிக்கும் தவறான உறவு இருப்பதாக கோபி  சொன்னதால் கோபி மீது குடும்பத்தில் உள்ள அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் இனியாவுக்கு பள்ளிக் கூடத்தில் சிறந்த மாணவி என்று விருது கொடுத்தால் பாக்கியாவும் எழிலும் சென்றுள்ளனர். மேடையில் ஏறிப் பேசிய இனியா என்னுடைய படிப்புக்கு தன்னுடைய அம்மா தான் காரணம் என்று சொல்ல பாக்கியாவும் எழிலும் சந்தோஷப்படுகின்றார்.

மேலும் கோபியும் ராதிகாவிடம் பொய் சொல்லி விட்டு இனியாவின் ஸ்கூலுக்கு வந்து விடுகின்றார்.எனவே மயூவை ஸ்கூலில் இறக்குவதற்காக வந்த ராதிகா கோபியைக் கண்டு விட்டு சண்டை பிடிக்கிறார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement