• Jul 25 2025

காலில் காயம் இருந்தால் வெற்றி விழாவில் நடனம் ஆட முடியாது- மீண்டும் கால்வீங்கிய புதிய புகைப்படத்தை பதிவிட்ட த்ரிஷா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அஜித் விஜய் ரஜினி கமல் விக்ரம் ஜெயம்ரவி விஷால் சூர்யா சிம்பு எனப் பல நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானவர் தான் த்ரிஷா. இவர் தனது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

 சோலோ ஹுரோயினாகவும் நடித்து வரும் இவர் சிறிய இடைவெளியின் பின்னர் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்லன் படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்திருந்த குந்தவைக் கதாப்பாத்திரம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.


மேலும் இப்படம் உலகம் முழுவதும்  450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடந்தது. இவ்விழாவிற்கு த்ரிஷா சமூகமளிக்காததால் ரசிகர்கள் பலரும் என்ன காரணம் என்று கேட்டு வந்தனர்.


அதற்கு த்ரிஷாதன்னுடைய கால்வீங்கியுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த நிலையில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீங்கிய  தனது காலை  புகைப்படம் எடுத்து, "உங்களுடைய காலில் காயம் இருந்தால் உங்கள் பட வெற்றி விழாவில் நடனம் ஆட முடியாது". என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் உங்களுக்கு சுகம் வரவில்லையா என்று கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement