• Jul 25 2025

என் படத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது- நயன் மற்றும் விக்கியின் வாடகைத் தாய் விவகாரம் குறித்து சமந்தா கூறிய பதிலடி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தா அண்மையில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது படிப்படியாக குணமாகி வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள யசோத திரைப்படம்  வருகிற நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கிய இப்படத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்து நடித்திருக்கின்றார்.இதனால் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.


அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாடகைத் தாய் முறை குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதால், இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளதாக இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது.


அதற்கு  சமந்தா கூறியதாவது : “வாடகைத் தாய் என்பது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக இருப்பதனால் யசோதா படம் பண்ணவில்லை. சில வருடங்கள் முன்னரே நான் இப்படத்தில் நடித்து முடித்துவிட்டேன். மேலும் அவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்வது மகிழ்ச்சியை தந்தால், அதில் தவறில்லை. அதுமட்டுமின்றி இதன்மூலம் படத்துக்கும் இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது” என  அந்த பேட்டியில் கூறி உள்ளார். 


Advertisement

Advertisement