• Jul 25 2025

மீடியா முன்னாடி உட்கார்ந்து பேசினால் எதுவும் நடக்காது - நடுரோட்டில் போராட்டத்தில் இறங்கிய நடிகை ஷகீலா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் சித்ரா குடியிருப்பு பகுதியில் சுமார், இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மற்றவர்களிடம் பராமரிப்பு தொகையாக 2500 ரூபாயும்,பேச்சுலர்களிடம் மட்டும் ஒன்பது ஆயிரம் ரூபாய் பராமரிப்பு கட்டணமாக வாங்குவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் இளம் பெண்களும் பாதிக்கப்பட்டு சாலைக்கு வந்து போராடுகின்றனர்.


இந்த குடியிருப்புக்கும் அதில் வசிப்பவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத ஷகிலா, தாமாகவே முன்வந்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து, வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சூளைமேடு தனியார் குடியிருப்பு பகுதியில் சில பேச்சிலர் பசங்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த குடியிருப்பில் பேச்சிலர்களுக்கு மட்டும் பராமரிப்பு கட்டணமாக ஒன்பதாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


இந்த தொகையை சிலரால் கட்டமுடியாததால், அவர்களின் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. பக்கத்து வீட்டில் இருந்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தினாலும், அங்கேயும் தண்ணீர் வாங்கக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை. இந்த காலத்திலும் இப்படி நடக்குதா என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.


சும்மா மீடியா முன்னாடி உட்கார்ந்து பேசுவதால் எதுவும் நடந்து விடாது, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அனைவரும் முன் வந்து குரல் கொடுக்க வேண்டும். இன்று நான் இவர்களுக்காக இங்கு வந்து இருக்கிறேன். இதற்கு ஒரு நியாயம் கிடைக்காமல் போகமாட்டேன். பொதுமக்களாகிய நீங்களும் இதற்கு உங்களின் ஆதரவை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி பலரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement