• Jul 24 2025

எனக்காக தான் அவரு இது செஞ்சாரு...நெகிழ்ந்து பேசிய நடிகை சீதா!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

80களில் ஷிப்ட் போட்டு நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக இருந்த சீதா, முதல் முறையாக பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அத்தேர்ட ஆரம்பத்தில் படத்தில் நடிக்கவில்லை என்று கூறி சீதா, தந்தையின் வற்புறுத்தலினால் புதிய பாதை படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது பார்த்திபன் சீதா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சீதாவின் வீட்டில் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனை 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அத்தோடு சீதா பார்த்திபன் தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்ந்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர்  சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.


எனினும் இதையடுத்து 2001ம் ஆண்டு பார்த்திபன் சீதா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருவரும் விவாகரத்து பெற்று பிரித்தனர். விவாகரத்து ஆன பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், பட வாய்ப்பு கிடைக்காததால், சீரியலில் நடித்தார். அப்போது சீரியல் நடிகர் சதீஷை தனது 43வது வயதில் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஆனால், அந்த வாழ்க்கையும் பாதியில் முறிந்து போனதால், தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வருகின்றார்.

தற்போது, நடிகை சீதா, பல இளம் நடிகையைப் போல சமூகவலைத்தளத்தில்  ஆக்டிவாக இருக்கிறார். 


வீட்டியில் மாடித்தோட்ட வளர்ப்பது, இயற்கையோடு பொழுதை கழிப்பது, நாய், பூனை, ஆடு குட்டிகளுடன் விளையாடி வருகிறார். தற்போது சீதா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், காரில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருக்கும் சீதா, பிரபாகர் அவர்களை பாடவைத்துள்ளார். அவரும் ரொம்ப அழகான ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாட்டை கேட்ட சீதா ரொம்ப அருமையான குரல், நல்ல பாட்டு இந்த பயணம் நன்றாக இருந்தது தூத்துக்குடி போகிறவரைக்கும் பிரபாகரன் எனக்காக இந்த பாடலை பாடினார் என்று நடிகை சீதா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement