• Jul 24 2025

இளையராஜா என்னிடம் இப்படி எல்லாம் நடந்து கொண்டார்.... கண்கலங்கிய பிரபல பாடகி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இளையராஜா இசையில் வெளியான 'மீரா' படத்தில் இடம்பெற்ற 'லவ்வுன்னா லவ்வு தான்..' என்ற பாடலின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பாடகி மின்மினி. 

இதனையடுத்து மேலும் ஒரு சில படங்களில் பிசியாக பாடி வந்த மின்மினி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இளையராஜா குறித்துப் பல விடயங்களைப் பகிர்ந்திருக்கின்றார்.


அதாவது "இளையராஜாவை முதன்முதலாக சந்தித்து பாட்டுப் பாடுவதற்கான சான்ஸ் கேட்டு சென்ற போது உன் பெயர் என்ன என அவர் என்னிடம் கேட்டார். நான் மின்மினி எனக் கூறியதற்கு இப்பிடி எல்லாமா பெயர் வைப்பீங்க எனக் கேட்டார்.  

பின்னர் அவர் என்னை பட சொன்னார். நான் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது இதனால் நீ கேரளாவிற்கு செல்ல வேணாம் இங்கயே இரு எனக்கூறி பாடுவதற்கு சான்ஸ் தந்தார்" என்றார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் இளையராஜாவிற்கு பாடல் பாடி வந்துள்ளார். பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படம் மூலம் ஏ ஆர் ரகுமான் அறிமுகமாக, அந்தப் படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடலை பாடும் வாய்ப்பு மின்மினிக்கு கிடைத்தது. பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த அந்த பாடலால் மின்மினி புகழின் உச்சத்திற்கு சென்றார்.


இதனையடுத்து 'தாலாட்டு' என்ற படத்திற்காக ஒரு பாடலைப் பாட இளையராஜா ஸ்டூடியோ சென்றுள்ளார் மின்மினி. ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் மின்மினி பாடுவதற்கு முன்னர் உள்ளே வந்த இளையராஜா பாடலில் ஒரு சில திருத்தங்களை செய்துவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் மீண்டும் உள்ளே வந்து மின்மினியிடம் "நீ எதற்கு அங்க இங்க எல்லாம் பாடப் போறாய்" எனக்கேட்டுள்ளார். அதனை அந்த ஸ்டூடியோவில் இருந்த அனைவரும் அவதானித்துள்ளனர். இதனைக் கேட்டதும்  கண்கலங்கிய மின்மினியை அருகில் இருந்த பாடகர் மனோ, மற்றும் படக்குழுவினர் அனைவரும் சமாதானப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement