• Jul 25 2025

ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பாடிய பின்பு இளையராஜா வாய்ப்பு தரல.. அதிர்ச்சி தகவல் கூறிய பாடகி மின்மினி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

1992ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சின்ன சின்ன ஆசை பாடலை பாடியவர் மின்மினி. 30 வருடங்களை கடந்து இருந்தாலும் தற்போதும் ரசிகர்களை அதிகம் கவரும் பாடல் அது.

1991 முதல் 1994 வரை பிரபல பாடகியாக இருந்து வந்த மின்மினி இளையராஜா இசையிலும் அதிகம் பாடல்கள் பாடி இருக்கிறார். அவர் இளையராஜா பற்றி தற்போது ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணியாற்றிய பிறகு இளையராஜா அடுத்து வாய்ப்பு தரவில்லையாம். வேறு இடத்தில் பாட தொடங்கியதால் அதையே இனி தொடர்ந்து செய் என காட்டமாக இளையராஜா அவரிடம் கூறிவிட்டாராம்.

ஒரு பாடல் ரெக்கார்டிங் நடுவில் இப்படி இளையராஜா திட்டி இருக்கிறார். உடன் இருந்த பாடகர் மனோ மின்மினியை சமாதானப்படுத்தினாராம். அந்த சம்பவத்திற்கு பிறகு இளையராஜா அவரை அழைக்கவே இல்லையாம்.

இந்த விஷயத்தை தற்போது ஒரு மலையாள டிவி ஷோவில் மின்மினி கலக்கத்துடன் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement