• Jul 24 2025

கமல் -மணிரத்னம் கூட்டணியில் இணையும் சிம்பு.. வெளியான சூப்பர் அப்டேட்.! அப்போ பெரிய சம்பவம் இருக்கு..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன். குறுகிய காலத்தில் இந்தப் படத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்துடன் KH234 படத்தில் கமல் இணையவுள்ளார். இந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் -கமல்ஹாசன் காம்பினேஷன் மேஜிக்கை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் வேல்ஸ் நிறுவனத் தயாரிப்பில் சிம்பு அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் STR50 படத்திற்காகத்தான் மணிரத்னம் -கமல் காம்பினேஷனில் சிம்பு இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் மணிரத்னத்தின் ஸ்டைலில் காதல் மற்றும் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement