• Jul 24 2025

உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்- ரவீந்தர் போட்ட காதல் பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனைத் திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.


மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.ரவீந்தரும் முதல் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார்.


ஆகவே இவர்களின் திருமண படங்கள் வெளியான போது, படத்தின் புரொமோஷனாக இருக்கும் என பலருக்கும் தோன்றியது.தற்போது திருமணத்திற்குப் பிறகு அவர்கள் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


அந்த வகையில் ரவீந்தர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் பின்வருமாறு கூறியுள்ளார்.நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ..ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான் என பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement