• Jul 25 2025

ஆபாசமாகப் பேசி தனியாக வர சொன்னார்கள்- பிரபல நடிகை ஆமனியின் கசப்பான அனுபவம்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் 1990-களில் பிரபல நடிகையாக இருந்தவர் ஆமனி. அந்தவகையில் இவர் தமிழில் 'தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம், ஹானஸ்ட் ராஜ், புதையல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 


அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஆமனி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் அளித்துள்ள பேட்டியில் "நான், சினிமா துறையில் அடியெடுத்து வைத்த புதிதில் சிலர் என்னை மிகவும் ஆபாசமாக பேசி அதையே நகைச்சுவை என்பது போல எனக்கு காட்டிக் கொண்டார்கள். 


அதுமட்டுமல்லாது சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கொடுப்பதற்கு சிலர் தங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் சொல்லும் இடத்திற்கு நீ மட்டும் தனியாக வரவேண்டும் என்று சொன்னவர்களும் பலர் இருக்கிறார்கள்" எனக் கூறியிருக்கின்றார்.


அத்தோடு "தமிழ் சினிமா மூலம் தான் எனது சினிமா வாழ்க்கைப் பயணம் ஆரம்பமானது. வாய்ப்புகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டேன். சினிமாவில் வர வேண்டும் என்றால் இப்படி எல்லாம் இருக்க வேண்டுமா என்று நான் அதிர்ச்சி அடைந்தபோது எந்த தவறும் செய்யாமலே சினிமாவில் நடிக்கலாம் என்று எனக்கு என் அம்மா தான் தைரியம் கொடுத்தார்'' என்றார்.

Advertisement

Advertisement