• Jul 25 2025

''குக் வித் கோமாளிக்காக இப்படியெல்லாம் கஸ்டப்படுகிறேன் '' - முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த சிவாங்கி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் ஷிவாங்கி. அவரது பெற்றோர்கள் மிகப்பெரிய பாடகர்கள், அண்மையில் அவர்களுக்கு இசைத்துறையில் விருது எல்லாம் கிடைத்தது.

பாடகியாக கலக்கி வந்த ஷிவாங்கி கடந்த 4 வருடங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். 

கோமாளியாக 3 சீசன்கள் கலக்கிய அவர் 4வது சீசனில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.கோமாளியாக இருந்த போது சமைக்க தெரியாத ஷிவாங்கி இப்போது எப்படி இவ்வளவு தெளிவாக சமைக்கிறார் என ரசிகர்களிடம் ஒரு பேச்சு அடிபட்டு வந்தது.

தற்போது இதுகுறித்து ஷிவாங்கி தனது டுவிட்டரில், குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து நிறைய பேச்சு அடிபடுகிறது.

ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணிநேரம் ஷுட்டிங் தொடங்கும் முன்பே வேலை செய்கிறோம், நான் மட்டும் இல்லை, அனைவருமே அப்படி தான். இந்நிகழ்ச்சிக்காக நிறைய பாடுபடுகிறோம், நாங்கள் எங்களது சிறந்த சமையலை வெளிக்காட்ட நிறைய உழைப்பை போடுகிறோம்.

கோமாளிகளும் ஒரு கெட்டப்பிற்காக அவ்வளவு மெனக்கெடுக்கிறார்கள் என பதிவு செய்துள்ளார். 


Advertisement

Advertisement