• Jul 24 2025

முன்னாள் கணவரின் தம்பிக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா.. அதிரடி பதில் கொடுத்து அசத்திய அகில்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

காதலித்து கல்யாணம் பண்ணிய நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் நாக சைதன்யா சமந்தாவை பிரிந்ததும் நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல் உறவில் இருப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகி இருக்கின்றன.


இந்நிலையில் நாக சைதன்யாவை பிரிந்துவிட்டாலும் சமந்தா அவரின் தம்பி அகில் அக்கினேனியுடன் இன்றுவரை நட்பாகவே பழகி வருகின்றார். அந்தவகையில் அகில் நடித்திருக்கும் ஏஜெண்ட் படம் ஏப்ரல் 28-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 


இதனையடுத்து சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அகிலை வாழ்த்தி படக்குழு தீயாக ஒரு போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகில். ஏஜெண்ட் படம் 28ம் தேதி ரிலீஸாகிறது. இது தீயாக இருக்கப் போகிறது. லாட்ஸ் ஆஃப் லவ்" என அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார் சமந்தா.


இந்த பதிவை பார்த்த அகில் "ரொம்ப நன்றி சாம். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என நம்பகிறேன்" என மிகவும் உருக்கமாக பதில் அளித்துள்ளார். இவ்வாறாக சமந்தா அகிலை வாழ்த்தியதும் பதிலுக்கு அவர் நன்றி தெரிவித்ததும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது.

இவ்வாறாக இவர்கள் இருவரது நட்பும் நீண்டகாலத்திற்கு தொடர வேண்டும் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement