• Jul 25 2025

நான் பாஸிட்டிவாக தான் இருக்கிறேன்... பதான் எதிர்ப்பு குறித்து ஷாருக்கான் பதில்!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சாருக் கான் பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர்  திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 


மேலும் 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். 

அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 


இந்நிலையில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள திரைப்படம் 'பதான்'. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.  


இதில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் நடனமாடிய வீடியோ, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.


இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ள ஷாருக்கான், “பதான் என்ன மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேச பக்தி படம். சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் வலம் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement