• Jul 26 2025

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக மணிகண்டா ராஜேஷ் படைத்த சாதனை ..அதுவும் இப்படியா.?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் செய்திராத சாதனையை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டா செய்துள்ளார் என இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதல் சீசனிலேயே மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆன இந்நிகழ்ச்சி, தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 6-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆறு சீசன்களையும் விறுவிறுப்பு குறையாமல் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.



பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.இவர்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டாவும் ஒருவர். அவர் இந்த சீசனின் அதிர்ஷ்டம் வாய்ந்த போட்டியாளர் என்றே சொல்லலாம்.

மேலும் அவர் இதுவரை முடிந்துள்ள 10 வாரங்களில் ஒரு வாரம் மட்டுமே நாமினேஷனில் சிக்கினார். எஞ்சியுள்ள வாரங்களில் நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் தான் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் மணிகண்டா. அதிகமுறை கேப்டன் ஆனவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார்.



அதன்படி இந்த சீசனில் 4 முறை அவர் கேப்டன் ஆகி உள்ளார். இந்த வாரம் நடந்த கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் யாஷிகா பிக்பாஸ் 2-வது சீசனில் மூன்று முறை கேப்டன் ஆனதே அதிகமாக இருந்து வந்தது.எனினும்  தற்போது மணிகண்டா அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement

Advertisement