• Jul 24 2025

நான் இனி வெறும் வடிவேலு இல்லடா.. கவுரவ டாக்டர் பட்டம் வென்ற வைகைப்புயல்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் நடிகர் வடிவேலு . கடந்த சில மாதங்களாக ஒரு சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்தவகையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தின்மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, தற்போது 'சந்திரமுகி 2, மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் ரீ என்ட்ரி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வடிவேலுவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், பொழுது போக்கு பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இதற்கு முன்னதாக நடிகர் ராகவா லாரன்சிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை இந்த அமைப்பு வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வடிவேலுவிற்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வடிவேலுவிற்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement