• Jul 25 2025

சத்யா மூவிஸ் நிறுவனத்தில் ஹிட் அடித்த படங்கள்... ஓல்ட் இஸ் கோல்ட் தான்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரை உலகில் சத்யா மூவீஸ் என்ற நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தொங்கினார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 6 படங்கள் நடித்துள்ளார். கமல், ரஜினி உட்பட பிற நடிகர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் தான்.


இதயக்கனி 1975ல் வெளியான படம். ஜெகந்நாதன் இயக்கியுள்ளார். எம்ஜிஆர், ராதாசலுஜா, வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் சீனிவாசன், மனோகர், பண்டரிபாய், உசிலை மணி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. 


காவல்காரன் 1967ல் ப.நீலகண்டன் இயக்கிய படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவகுமார், நம்பியார், அசோகன், வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா மற்றும் பண்டரிபாய் நடித்த படம். எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர். தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. 


காக்கி சட்டை இந்தப்படத்திற்கான விநியோகம் சத்யா மூவீஸ். கதையை சத்யா மூவீஸ் குழு கவனித்தது. கமல், அம்பிகா, மாதவி, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் செம. இது ஒரு வெள்ளிவிழா படம். 


பாட்ஷா 1995ல் வெளியான படம். ரஜினி, நக்மா, ரகுவரன், சரண்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். கதை மற்றும் இயக்கத்தை சுரேஷ் கிருஷ்ணா பார்த்துக் கொண்டார். தேவாவின் இசையில் பாடல்கள் ரசிகர்களுக்கு சிறந்த விருந்து. 


Advertisement

Advertisement