• Jul 24 2025

நான் சந்தோஷமாக இல்லை- மஞ்சிமாமோகன் திருமணத்தை நினைத்து இப்படி ஒரு டுவிட் போட்ட கீர்த்தி சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியாகிய அச்சம் என்பது மடடையடா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறியப்பட்டவர் தான் மஞ்சிமா மோகன்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இடையில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்டதால் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.மேலும் கடந்த சில ஆண்டுகளாக கெளதம் கார்த்திக்கை காதலித்து வந்த மஞ்சிமா மோகன் இன்று அவரை திருமணம் செய்து கொண்டார்.


முறையில் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்கு பிரபலங்கள் ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு பதிவினை போட்டுள்ளார்.

திருமணத்திற்கு தன்னால் வரமுடியவில்லை என்பதை நினைத்து, நான் சந்தோசமாக இல்லை அம்மு, உன்னுடைய சிறப்பான நாளில் இச்சமயத்தில் உன்னோடு நான் இல்லை. என்று கூறி இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.இவரின் பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement