• Jul 24 2025

ஷக்தியின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா... எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் வந்தது... வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகிழ்ச்சிகள் அனைத்துமே எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடும். அந்நிகழ்ச்சி மட்டுமல்லாது அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களும் எளிதில் மக்களிற்கு தெரிந்த முகங்களாக மாறி விடுவார். 

அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்து விட்ட நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. 


அதில் 1 ஆவது சீசனை யாராலும் மறக்க முடியாது. இந்த சீசனிற்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன. அதாவது இதுநம் கலாச்சாரத்திற்கு சரியான நிகழ்ச்சி இல்லை, வருங்காலத்தினருக்கு இப்படியொரு நிகழ்ச்சியை காட்டுவது சரியில்லை எனப் பல விமர்சனங்கள் கூறப்பட்டன.

மேலும் இந்நிகழ்ச்சியானது பலரது வாழ்க்கையில் நல்ல வெற்றியை கொடுத்தாலும் சிலருக்கு சோகத்தை கொடுத்துள்ளது.

அந்தவகையில் பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலத்தின் மகன், நடிகர் என்ற அடையாளத்தோடு உள்ளே நுழைந்த ஒருவர் தான் ஷக்தி. இவர் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் இந்நிகழ்ச்சி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 


அதாவது "மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர தான் அந்நிகழ்ச்சி சென்றேன், ஆனால் இதே நிகழ்ச்சி என் வாழ்க்கையை பல வகையிலும் நாசமாக்கிவிட்டது. அங்கிருந்தவர்கள் என்னை வேறு திசைத்திருப்பி மன உளைச்சலை கொடுத்தனர்" எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "இந்நிகழ்ச்சியினால் கெட்டப்பெயர் எனக்கு வந்தது தான் மிச்சம், என் வாழ்க்கையே போனது என" எமோஷ்னலாக பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சை கேட்ட அவரின் ரசிகர்கள் பலரும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement