• Jul 25 2025

உடனடியாக போலீசில் புகார் அளியுங்கள்... நடிகையின் பெயரில் பண மோசடி... பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை கோமல் சர்மா. அந்தவகையில் இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டப்படி குற்றம்' என்ற படத்தின் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டுமல்லாது நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, வைகை எக்ஸ்பிரஸ் படங்களிலும் நடித்து இருந்தார். 


இவ்வாறாக தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களிலும் கோமல் சர்மா நடித்து இருக்கிறார். நடிப்பிற்கு எந்தளவிற்கு பேர் போன ஒருவராக விளங்கி வருகின்றாரோ அந்தளவிற்கு கவர்ச்சியிலும் கலக்கி வருகின்றார்.


இந்த நிலையில் சமீபத்தில் தனது பெயரில் பண மோசடி நடப்பதாக ரசிகர்களை கோமல் சர்மா எச்சரித்து உள்ளார். அந்தவகையில் இதுகுறித்து கோமல் சர்மா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கி உள்ளனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒரு மொபைல் நம்பரை பதிவிட்டு உள்ளார். அது எனது நம்பர் இல்லை. போலியானது. 


இதன் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுகிறார். யாரும் இதை உண்மை என்று நம்பி ஏமாந்து போகாதீர்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு யாரேனும் குறுந்தகவல் அனுப்பினால் போலீசில் புகார் செய்யுங்கள்'' என்று அதிரடியாக குறிப்பிட்டுள்ளார் நடிகை கோமல் சர்மா.

நடிகையின் பெயரில் சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுகின்றது என்ற இந்தத் தகவலானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement