• Jul 24 2025

அந்த விஷயத்தை மறைக்கிறதற்காக உருட்டின உருட்டுத் தான் 'பொன்னியின் செல்வன்'... கண்டபாட்டிற்கு கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. 


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ 500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் மணிரத்னம் யாருமே எடுக்க முடியாத பொன்னியின் செல்வனை எடுத்து சாதித்துவிட்டார் என்று பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி இருந்தார்கள்.


இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துவிட்டது. ஆனால் படத்தை பார்த்த பலரும் மணிரத்னம் மிகவும் ஸ்லோவாக இப்படத்தை எடுத்துவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது ஒரு சில விஷயங்களை மறைக்க தான் மணிரத்னம் இப்படி ஒரு கிளைமேக்ஸ் வைத்தார் எனவும் பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.அவ்வாறான விமர்சனங்களில் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


அதாவது "ஆரிய பார்ப்பானை  எதிர்த்த கரிகாலனுக்கும் ஆரிய அடிமை அருள்மொழிக்கும் நடந்த குடும்ப சண்டை தான் இவனுங்க வரலாறு. அருள்மொழி பாபானுங்கள வச்சி காரிகாலனை போட்டான் அவன் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பாப்பானுங்களை கொலை தண்டனை இல்லாமல் நாடு கடத்திட்டான். அதை எல்லாம் மறைக்க உருட்டுன உருட்டு தான் PS" எனக் கூறி கழுவி ஊற்றி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement