• Jul 23 2025

வெளியாகிய 5 நாட்களில் விடுதலை படம் பெற்ற மொத்த வசூல்-அடடே அதுக்குள்ள இத்தனை கோடி நெருங்கி விட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை.இப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, ராஜிவ் மேனன் மற்றும் சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.வடசென்னை 2 போல் பல வருடங்களாக்காமல் இந்த வருடமே விடுதலை 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும்.


இந்நிலையில், இப்படம் வெளிவந்த 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.விடுதலை படமானது மலை வாழ் மக்களை காவல் துறையினர் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள் உள்ளிட்ட விவகாரங்களை பேசியிருக்கிறது.


 இது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றாலும்; படத்தின் பல காட்சிகள் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் என எழுந்துள்ளன.




Advertisement

Advertisement