• Jul 23 2025

ஸ்டார் ஹோட்டலிற்கு சென்று அதிர்ச்சியடைந்த ஸ்ரேயா.. முன்வைத்த பரபரப்பு புகார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்த ஸ்ரேயா, நடிப்பிலும் சரி, அழகிலும் சரி ஏராளம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைகுத் தாயான ராஷ்மிகா, அதன் பின்னரும் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். 


இந்த நிலையில் சமீபத்தில் மராட்டிய மாநிலம் அலிபாக் நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற ஸ்ரேயா அங்கு ஒரு பெரிய கூண்டுக்குள் ஏராளமான பறவைகளை அடைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு புகார் ஒன்றினை முன் வைத்திருக்கின்றார். அதாவது ''நீங்கள் பறவைகள் ஆர்வலராக இருந்தால் அவற்றை இப்படி சிறைப்பிடித்து வைக்கக்கூடாது. பறவைகள் மிகவும் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கூண்டில் இத்தனை பறவைகளா? இப்படி பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பது சட்டப்பூர்வமானதா?'' என்று மிகவும் காண்டமாக பதிவிட்டுள்ளார். 


அதுமட்டுமல்லாது "நட்சத்திர ஓட்டலிலோ, வீடுகளிலோ பிராணிகளை கூண்டில் அடைத்து பொறுப்பற்ற முறையில் வளர்க்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டால் அவற்றை மூச்சுத்திணறும் கூண்டில் அடைக்காமல் அவற்றுக்கு தனி இடத்தை ஏற்பாடு செய்யவேண்டும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement