• Jul 24 2025

Flight -ல ஒருத்தன் என் பின்னாடி கை வெச்சான் மரண அடி கொடுத்தேன்- பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக பாக்கியா முன்னேறிக் கொண்டே வருகின்றார். ஆனால் பாக்கியா வேண்டாம் என்றே போன கோபி ராதிகாவினால் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றார். இந்த சீரியல் இல்லத்தரிசிகளின் பேவரிட் சீரியலாகவும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஜெனி என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது இவர் ஒரு நாள் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பிளைட்டில் வந்து கொண்டிருக்கும் போது இவருடைய சீற்றிற்கு பின்னால் இருந்த நபர் இவரின் உடலில் பின்புறத்தினைத் தொட்டுள்ளார்.


ஏதோ பூச்சி தான் என்று நினைத்தவர் இரண்டு மூன்று முறை எழும்பி எழும்பி பார்த்திருக்கின்றாராம். பூச்சி எதையும் காணவில்லையாம். பின்னர் தான் அந்த நபருடைய கை தான் என்பதை உணர்ந்ததோடு அந்த கையைப் பிடித்து அப்படியே அவருக்கு பல அடிகளையும் கொடுத்தாராம். அத்தோடு அப்படி செய்யிறவங்களை பார்த்து பயப்பிடக் கூடாது விலாசி விட்டிரோனும் என்றும் கூறியுள்ளார்.


மேலும் தன்னுடைய வாழ்க்கையில் இனிமேல் பார்க்கக் கூடாது என்கிற அளவுக்கு ஒரு பொண்ணும் இருக்கிறாங்க ஒரு பையனும் இருக்கிறாங்க. நான் சினிமாவிற்கு வந்த புதில நிறைய பேர் என்னோ மேக்கப் ஆடைகள் எல்லாத்தையும் பார்த்து சிரிச்சிருக்கிறாங்க நக்கல் அடிச்சிருக்கிறாங்க. ஆனால் அப்போ அது எல்லாத்தையும் சரியாக கற்று கொண்டு வருகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement