• Jul 25 2025

படத்தில் கதை இல்ல...ஜெயிலர் கிட்ட வாராது-விக்ரம் அளவுக்குதான் வரும்... லியோ குறித்து பகிரங்கமாக பேசிய திரையுலகத்தினர்....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயின் லியோ பட வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் கொடுத்துவரும் அப்டேட் செய்திகள் ரசிகர்களை குஷி படுத்தினாலும் அந்த அறிவிப்பு உண்மை தானா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது. கடந்த 19ம் திகதி ரிலீஸ் ஆனா விஜயின் லியோ திரைப்படம் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறிய நிறுவனம் அதிகம் வசூலித்த தமிழ் படமென குறிப்பிட்டிருந்தது.


அதோடு முதல் நாளில் லியோ படம் 148 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டிருந்தது. தற்போது 7 நாள் முடிவில் 461 கோடி தான் வசூல் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. படம் ரிலீஸ் ஆகி 7 நாளும் தியேட்டர் நிரம்பி வழிந்த நிலையில் முதல் நாள் வசூல் அளவு ஏன் அடுத்த நாட்களில் கிடைக்கவில்லை என் கேள்வி எழுகிறது.


இது குறித்து திரையுலகினரிடம் விசாரித்த போது லியோ ரிலீஸ் ஆகி 5 நாட்களும் விடுமுறை நாள் என்பதால் நல்ல வசூல் கிடைத்தது பிறகு அது படிப்படியாக குறைந்து விட்டது. படம் கதை ரீதியாக தாங்கி  நிற்காததால் ரசிகர்களே பார்ப்பதை நிறுத்தி விட்டனர். எதிர் வரும் ஞாயிற்று கிழமை வரை போகும் அதற்க்கு பிறகு அவ்வளோதான் என்று கூறியுள்ளனர். லியோ ஜெய்லரை தாண்டாது பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் படமளவுக்கு வசூலிக்கும் எனவும் கூறுகின்றனர்


எனினும் லியோ தற்போது 9 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தின் உலகளாவிய வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டியுள்ளது என்று படத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் 500 கோடியை கடந்த 2-வது படமாக லியோ திரைப்படம் அமைந்துள்ளது. அதேபோல் அனைத்து காலத்திலும் ரூ500 கோடி வசூல் செய்த 3-வது தமிழ் படமாக லியோ உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement