• Jul 26 2025

ரசிகர்களுடன் ஆடிய பிரபலங்கள்... ஹாரிஸின் தரமான செய்கை... இன்னும் VIBE அடங்கல சார்... வேற மாறி தெறிக்க விட்டாரு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் நடந்த ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியை காண  ஏராளமான ரசிகர்கள் வருகைதந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில்  இருபத்திரண்டாயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் மனைவி , இயக்குனர் கௌதம் மேனன் , நடிகர் விஜயகுமார் , நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட ஏராளமான பிரபலங்களும் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு களித்தனர். 


குறிப்பாங்க இயக்குனர்  கௌதம் மேனன் ரசிகர்களுடன் இணைந்து நடனம் ஆடி பாடி மகிழ்ந்தார். மேலும் அடுத்த வருடம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை 2.0 நிகழ்ச்சி பெப்ரவரி மாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.ஆகமொத்தத்தில் சும்மா பட்டையை கிளப்பி உள்ளது நிகழ்ச்சி. 


சென்னையில் நடந்த ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியில் திரண்ட ரசிகர்களால் , போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.


கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், நந்தனம் சாலை, சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.  

Advertisement

Advertisement