• Jul 23 2025

நடுவில் அசின்... இரு புறமும் பிரபல ஹீரோக்கள்... நிஜமாவே இப்படி நடந்திருக்கா... நம்பவே முடியல..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல கலக்கல் நாயகியாகத் திகழ்ந்து வந்தவர் நடிகை அசின். இவரின் அழகிலும், நடிப்பிலும், சிரிப்பிலும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் என்றால் அது நம்ம அசின் தான். 


இவ்வாறான அசின் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில்லை. இவருக்கு தற்போது ஒரு அழகிய மகள் இருக்கின்றார். 


இவரைப் போன்றே தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்களாக விஜய்-சூர்யா உள்ளனர். விஜய்-சூர்யா கூட்டணி 'நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ்' படத்தைப் போன்று மீண்டும் இணைய வேண்டும் புதிய படம் வர வேண்டும் என ஏங்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் அப்படி ஒரு படம் அமையுமா என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம். 


இந்நிலையில் தற்போது விஜய், சூர்யா, அசின் 3 பேரும் இருக்கும் கலாட்டாவான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதனை முதலில் பார்த்தவர்கள் ரியல் போட்டோ எனநம்பி இருந்தனர். ஆனால் ஒரு சிலர் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று கூறி வருகின்றனர்.


எது எவ்வாறாயினும் அந்தப்புகைப்படம் பார்க்க சூப்பராக உள்ளது. இதனால் இப்புகைப்படத்தை மேலும் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement