• Jul 23 2025

இந்தக் கதையில் வில்லன் தான் உன்னைத் தேடி வருவான்- தனி ஒருவன் 2 திரைப்படத்தின் Anouncement வீடியோ! ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் தனி ஒருவன். இத்திபை்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

இதில் சித்தார்த் என்னும் ஸ்டைலிஷ் வில்லனாக நடிகர் அரவிந்த்சுவாமி நடித்திருந்தார்.விறுவிறுப்பான கதை களத்துடன் ஆக்சன், காதல், அரசியல், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமான 'தனி ஒருவன்' வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 


இந்த நிலையில் தற்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் இருக்கும் ட்விஸ்ட் ஒன்றை மோகன் ராஜா ப்ரோமோ ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாகத்தில் "நீ யார் என்று சொல்லு... உன் எதிரி யார் என்று நான் சொல்கிறேன்" என தன்னுடைய எதிரியை தானே முடிவு செய்து கொண்டு மித்ரன் களத்தில் இறங்குவார்.

 ஆனால் இந்த முறை ஜெயம் ரவியை தேடி வில்லன் வரப்போகிறாராம். ஆனால் யார் அந்த வில்லன் என்கிற தகவலை தற்போது வரை படக்குழு வெளியிடவில்லை.முதல் பாகத்தில் ஹீரோவை விட அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் வில்லன் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement