• Jul 24 2025

காவியாவுக்காக குளத்துக்குள் குதித்த பார்த்திபன்- எதிரில் வந்து நின்று சிரித்த காவியா- கலகலப்பான Eeramaana Rojaave Season 2 Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கான இந்த வாரப் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது எல்லோரும் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.அப்போது காவியாவுக்கு பூ கொடுக்கச் சொல்லி பார்த்திபனிடம் கொடுத்து விடுகின்றார். அப்போது காவியா குளத்துக்குள் விழுந்து விட்டதாக அவருடைய மாமா கத்துகின்றார்.


இதனால் பார்த்திபன் ஓடி வந்து குளத்துக்குள் விழுந்து காப்பாற்றுகின்றார். தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுக்கும் போது பார்த்திபன் முன்னாடி காவியா வந்து நின்று சிரிக்கின்றார்.

காவியாவைப் பார்த்த பார்த்திபன் தான் துாக்கி வைத்திருப்பது யார் என்று பார்க்கின்றார். அப்போது அந்தப் பெண்ணும் பார்த்திபனைப் பார்க்கின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement