• Jul 26 2025

தன்னுடைய கல்யாண அல்பத்தை பார்த்து சோனாலி வந்திருப்பதை அறிந்த இனியா- புதிய சிக்கலில் சிக்கிய விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் புதிதாக ஆரம்பிகக்கப்பட்ட சீரியல் தான் இனியா. இந்த சீரியலில் விக்ரம் பொல்லாதவன் என்ற உண்மை இனியாவுக்கு திருமணத்திற்குப் பிறகு தான் தெரிய வந்துள்ளது. இதனால் இனியா விக்ரமுடன் அடிக்கடி சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜேசின் பெற்றோர் தங்களுடைய பிள்ளையைக் கண்டு பிடித்துத் தருமாறு விக்ரமிடம் வந்து புகார் அளிக்கின்றனர். இதனைப் பார்த்த இனியா அதிர்ச்சியடைகின்றார்.

பின்னர் இனியாவிற்கு விக்ரமின் தங்கை வந்து கல்யாண அல்பத்தைக் காட்ட அந்த அல்பத்தில்  சோனாலி இருப்பதைப் பார்த்து இனியா அதிர்ச்சியடைகின்றார். இதனால் இனியா விக்ரமிடம் சோனாலி பற்றிக் கேட்பாரா உண்மைகளைக் கண்டு பிடிப்பாரா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


Advertisement

Advertisement