• Jul 26 2025

பானுப்பிரியா இறந்திட்டாங்களா?- எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க- கடும் கோபத்தில் திட்டி தீர்த்த சனம் ஷெட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சனம் ஷெட்டி 'அம்புலி' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய தர்ஷனின் காதல் விவகாரம் தான். 

இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது  திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் சனம் ஷெட்டி தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 


ஆரம்பதில் இவர் நடந்து கொண்ட விதம் நடிப்பது போல் தெரிந்தாலும், பின்னர் அவரது உண்மை குணம் என்ன என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. மனதில் பட்டத்தை பளீச் என பேசும் குணம் இவரிடம் இருந்ததால், சனம் ஷெட்டிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியது . இவர் வெளியேறிய பின் கூட மீண்டும் சனம் ஷெட்டி, வயல் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.


இப்படியான நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார். அதில் நடிகை பானுப்பிரியா மேடம் இறந்து விட்டதாகவும் அவருடைய படத்திற்கு மாலை போடுவது போலவும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. உங்கட சேனலுக்கு இப்படி வியூ வரனும் என்பதற்காக இப்படியெல்லாம் தப்பு தப்பா போடுவீங்களா?. நல்லா இருக்கிறவங்களை ஏன் இப்படி இறந்திட்டாங்க என்று சொல்லி போஸ் போடுறீங்க என கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.


இவரைப் போல இன்னும் பல பிரபலங்களும் இந்த வதந்திக்கு எதிராக தம்முடைய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement