• Jul 26 2025

மணமகளின் காலில் விழுந்த மணமகன்... கியாரா அத்வானி கல்யாணத்தில் நிகழ்ந்த சுவாரஷ்ய சம்பவம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் இந்த ஆண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு ஜோடியாக கியாரா அத்வானி -  சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி விளங்கி வருகின்றது. அதற்கு முக்கிய காரணமே தங்கள் காதல் பற்றி மீடியாக்களிடமும் சரி, நண்பர்களிடமும் சரி எங்கேயும் மூச்சு விட்டு உறுதி செய்யாமல், எந்தவொரு கிசு கிசுவிலும் சிக்காமல் தற்போது வெற்றிகரமாக தங்களுடைய திருமணத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.


அந்தவகையில் இவர்களது கனவுத் திருமணம் ராஜஸ்தான், ஜெய்சால்மரில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்று முடிந்த நிலையில், அன்று இரவே புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறினர்.


மேலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே சூழ இத்திருமணம் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் இந்தத் தம்பதிக்கு சமூக வலைத்தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் பலவும் வெளியாகி இணையத்தை ஆட்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திருமண பாரம்பரிய சடங்குகள் மேற்கொண்டிருந்தபோது மணப்பெண் கியாராவை நிற்க சொல்லிவிட்டு மணமகன் சித்தார்த் மல்ஹோத்ரா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


வழக்கமாக மணமகன் காலில் மணமகள் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது தான் வழமை. ஆனால் இவர்களது திருமணத்தில் வழக்கமான பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் வகையிலும், கியாராவின் மீதான தன் அளவில்லாத காதலை காண்பிக்கும் வகையிலும் சித்தார்த் கியாராவில் காலில் விழுந்து வணங்கியமை பாலிவுட் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. 

Advertisement

Advertisement