• Jul 25 2025

அது உண்மை தானாம்.. காஷ்மீரிலிருந்து திரிஷா வெளியேறியமைக்கான காரணம் இதுதான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது 'லியோ' படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் வாயிலாக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து திரிஷா நடித்து வருகிறார். 


அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் உடைய ஷூட்டிங் ஆனது கடந்த மாதம் சென்னையில் ஆரம்பமானது. இதனையடுத்து பின்னர் மூணாறில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாத இறுதியில் விஜய், திரிஷா உட்பட ஒட்டு மொத்த படக்குழுவினரும் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர். 


அந்தவகையில் காஷ்மீரில் 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் அங்கு ஷூட்டிங் ஆரம்பமாகி சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்காக காஷ்மீர் சென்ற 3 நாட்களில் திரிஷா மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டதாகவும், லியோ படத்திலிருந்து வெளியேறி விட்டதாகவும் கூறி ஒரு சில செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தன. இருப்பினும் பின்பு திரிஷா படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக வெளியான தகவல் வதந்தி எனத் தெரிய வந்தது.


இந்நிலையில் தற்போது மற்றோர் செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது லியோ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காஷ்மீரில் இருந்து த்ரிஷா வெளியேறியது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது. 

அதாவது காஷ்மீரின் வானிலை காரணமாகத் தான் நடிகை த்ரிஷா டெல்லிக்கு சென்றுள்ளார். 3 நாட்கள் அங்கு தங்கியிருந்த த்ரிஷா பின்னர் இன்று மீண்டும் காஷ்மீர் திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் காஷ்மீரில் வெப்பநிலை -1°C முதல் -3°C வரை நிலவுகிறது. இந்த தட்பவெட்ப நிலை த்ரிஷாவின் உடல்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை இதன் காரணமாகத் தான் அவர் வெளியேறி பின்னர் மீண்டும் காஷ்மீருக்கே சென்றிருக்கின்றார்.

Advertisement

Advertisement