• Jul 25 2025

தண்ணீர் பிரச்சினை இருக்கும் போது சினிமா முக்கியமா?- மேடையிலிருந்து வெளியேற்றப்பட்ட சித்தார்த்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாய்ஸ் படத்தின் மூலம் சாக்லெட் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த், கடந்த 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஹீரோ, கெஸ்ட் ரோல், கேமியோ என பலவிதமான கேரக்டர்களில் நடித்துள்ளார் சித்தார்த். 

ஆனாலும், இதுவரை அவரது கேரியரில் பெஸ்ட் திரைப்படம் என எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த குறையை சித்தா திரைப்படம் சரி செய்துள்ளது. அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம்,நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


 சித்தார்த்துடன் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இன்றைய சமூகத்தில் அதிகமாக நடந்துவரும் Child Abuse பற்றி பக்குவமாக விவரிக்கிறது இந்தப் படம்.இதனால் சித்தார்த்திற்கும் நல்ல பாராட்டுக் கிடைத்து வருகின்றது.

இப்படியான நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கூடாது என கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நடிகர் சித்தார்த் நடித்து உள்ள சித்தா படத்தின் பிரெஸ் மீட் இன்று கர்நாடகாவில் நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்துவிட்டனர்.

தமிழ் நடிகர் இங்கே பேச கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சித்தார்த் அங்கிருந்து பாதியில் கிளம்பி இருக்கிறார்.அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement