• Jul 24 2025

என்னது 32 வருடங்கள் ஆகிவிட்டதா?நம்பவே முடியல ...! 'என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும்' - குஷ்பு பகிர்ந்த வைரல் பதிவு..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. இப்படத்தின் கதாநாயகனாக பிரபு, கதாநாயகியாக குஷ்பு நடித்திருந்தனர். மேலும் ராதாரவி, மனோரமா, ராஜேஷ் குமார், உதய் பிரகாஷ், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமா வரலாற்றில் சின்னதம்பி படம் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதென நம்பவே முடியவில்லை.

என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி.வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளப்பிய இசைக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நந்தினி, எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் நிறைந்திருப்பார்! மீண்டும் ஒருமுறை நன்றி என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement