• Jul 25 2025

உடல்நலக் குறைவால் போராடும் மதுரை கதிரேஷன்.. தனுஷிற்கு வந்த மற்றோர் சிக்கல்.. வெளியான பரபரப்புத் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவலில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்று கூறி இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இதனையடுத்து இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது 70 வயதான கதிரேசன், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


இந்நிலையில் கதிரேசனின் உடல்நிலை சற்று மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனவும் மருத்துவமனை டீனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கதிரேசனின் மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் இந்த கோரிக்கை மனுவை முன் வைத்துள்ளனர்.


இந்த சம்பவமானது தற்போது பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசனின் வழக்கறிஞர் டைட்டஸ், கதிரேசனின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அவரது டிஎன்ஏவை எடுத்து பாதுகாக்க மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement