• Jul 26 2025

நிகழ்ச்சிக்கு வராதது ஒரு குற்றமா?- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சன்னிய லியோன்- போலீஸில் புகார் கொடுத்த நபர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகை சன்னி லியோன் இன்றைய இளசுகளின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார். முதலில் இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது தென்னிந்திய சினிமாக்களிலும் தலை காட்டுகிறார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த நடிகை என்று கூட இவரை சொல்லலாம்.

சன்னி லியோன் தன்னுடைய இளமைக் காலங்களில் அடல்ட் மூவிகளில் நடித்து பிரபலமடைந்தவர். அது எல்லாம் தன் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களாக நினைக்கிறேன் என்று சொல்லி முடித்து விட்டார். தற்போது திரைப்படங்களில் மட்டுமே நடித்த வருகிறார்.இவர் அடல்ட் மூவி துறையிலிருந்து வெளியே வந்து விட்டாலும், இவர் மீதான பார்வை என்பது இன்று வரை மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


அவ்வப்போது தென்னிந்திய சினிமாக்களில் தலைக்காட்டி வரும் சன்னி லியோனுக்கு கேரள மாநிலத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறார்கள். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானின் ஒரு படத்தில் சன்னி லியோன் அவருடன் ஆட்டம் போட்டிருந்தார்.அதன் பிறகு கேரளாவில் பிரபலம் அடைந்த சன்னி லியோனை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அழைத்திருக்கிறார்கள். 


அவரும் வருவதாக சொல்லிவிட்டு பின் வரவில்லையாம் . இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நடிகை சன்னி லியோன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி போதிய ஆதாரம் இல்லாததால் சன்னி லியோன் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து விட்டாராம். நடிகை சன்னி லியோன் அவ்வப்போது இதுபோன்ற சர்ச்சைகளில் அதிகம் சிக்குகிறார். அவர் மீதான காழ்ப்புணர்ச்சி மற்றும் விமர்சனம் என்பது இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Advertisement

Advertisement