• Jul 24 2025

பயங்கர வசூல் மோதலில் விஜய்-அஜித்... தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸையே அடித்து நொறுக்கி முன்னிலையில் இருப்பது இவரா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாகத் திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்களின் படங்கள் நீண்ட வருட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. 

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுவது இல்லை. அதாவது எப்போதும் அவர்கள் டுவிட்டரில் எதிரும் புதிருமாக சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.


இந்நிலையில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி இவர்கள் இருவரின் படங்களும் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்தவகையில் அஜித்தின் 'துணிவு', மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இரு படங்களும் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

இருப்பினும் தமிழகத்தில் அதிக வசூல் செய்து வாரிசை விட முதல் நாளில் இருந்து முதல் இடத்திலேயே உள்ளது அஜித்தின் துணிவு. அந்தவகையில் தற்போதைய வசூல் நிலவரம் வெளியாகி இருக்கின்றது. அதாவது தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் துணிவு ரூ. 92 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 90 கோடியும் மொத்தமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement