• Jul 24 2025

வெளில போய் பார்த்ததுக்கு பிறகு நீ குழந்தை- அசீமுடன் நட்பில் இருக்க ஆசைப்படும் ஹவுஸ்மேட்ஸ்- அட்டகாசமான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

அக்டோபர் 9ந் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது 100வது நாளைக் கடந்துள்ளது.கடந்த வாரமே பணப்பெட்டி வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் பணப்பெட்டிக்கு பதிலாக எவிக்டானவர்கள் உள்ளே வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்து காரசாரமான சண்டைகள் நடந்தன. நிகழ்ச்சியின் முதல் நாளில் டீக்கு சண்டை போடத்தொடங்கிய அசீம் இப்போது வரை கொஞ்சம் கூட எனர்ஜி குறையாமல் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். அதேபோல, ரசிகர்களால் பூமர் அங்கிள் என்று அன்போடு அழைக்கப்படும் விக்ரமனும் அதே எனர்ஜியோடு இருக்கிறார்.

இந்த சீசனை மிகவும் சுவாரசியமாக கொண்டுச் சென்ற மொத்த பெருமையும் அசீமையைச் சேரும். அவர் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பல நேரம் அவர் மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட முறையால் ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால், இந்த சீசனின் டைட்டிலை விக்ரமன் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மூன்றாம் இடம் ஷிவினுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் 3 லட்சம் பெறுமதியான பணப் பெட்டியுடன் கதிரவன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.அமுதவாணன் பணத்தை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,கதிரவன் வெளியேறியது அனைவருக்கும் ஏமாற்றமாகவே இருந்தது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் யாருடன் நட்பினை வைத்துக் கொள்ள விரும்புகின்றீர்கள் எனக் கேட்ட போது பெரும்மபாலானோர் அசீம் பேரையே கூறுகின்றனர். இந்த ப்ரோமோ பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது எனலாம்.



Advertisement

Advertisement