• Jul 25 2025

ஜனனியை பழிவாங்கிய போட்டியாளர்-முன்னாள் பகை தான் காரணமா..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழச்சி ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.தினந்தோறும் பிரச்சனைகளாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று குயின்சி மற்றும் ஜனனி இருவருக்கிடையே மிகப்பெரிய மோதல் வெடிக்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி  இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. பொதுவாகவே பிக் பாஸ் வீட்டில் குயின்சியின் நடவடிக்கை நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் விளையாட்டில் கவனத்தை செலுத்தாமல் புறணி பேசுவது, தேவையில்லாமல் கோபப்பட்டு முகத்தை திருப்புவது என்று அவரின் நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரமோவில் ஜனனி குயின்சியின் காலில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜனனி, குயின்சியின் டவலை எடுத்து உபயோகப்படுத்தி இருந்தார்.

இதனால் கடுப்பான குயின்சி ஜனனியை அனைவரின் முன்பும் திட்டி விடுகிறார். ஆனால் ஜனனி தெரியாமல் எடுத்து விட்டேன் என்று எவ்வளவோ சமாதானம் பேசுகிறார். குயின்சி ஜனனி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன ஜனனி அவரின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்கிறார்.

அதன் பின்னரும் கூட குயின்சி அதைப்பற்றியே பேசியதால் கடுப்பான ஜனனி கையில் இருக்கும் காபி கப்பை கீழே போட்டு உடைக்கிறார். இப்படி வெளியாகி இருக்கும் ப்ரமோவை பார்த்த பலரும் குயின்சிக்கு ஜனனி மீது தீராத வன்மம் இருப்பதாக சொல்கின்றனர். அதனால் தான் ஒவ்வொரு முறையும் ஜனனியை அவர் காயப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு டாஸ்க்கின் போது ஜனனி வெற்றி பெற்றது குயின்சிக்கு பிடிக்கவில்லை. மேலும் அது அவருடைய முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது. அதனாலேயே அவர் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார்.எனினும்  தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை விடாத குயின்சி நன்றாக ஜனனியை பழி வாங்கி இருக்கிறார்.

மேலும்  இந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் காட்டப்பட இருக்கிறது. ஆனால் உண்மையில் உப்பு சப்பில்லாத இந்த விஷயத்தை பிக் பாஸ் ஏதோ மிகப்பெரிய சண்டை போல் பில்டப் செய்துள்ளார். அத்தோடு இந்த நிகழ்வு நிச்சயம் கமலின் பார்வைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை ஆண்டவர் எப்படி கையாள்வார் என்பதை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Advertisement