• Jul 24 2025

சமந்தாவின் மாஜி கணவருடன் இணையும் ப்ரியாமணி... அதுவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற நடிகைகளில் ஒருவர் ப்ரியாமணி. இவர் 'பருத்திவீரன்' என்ற படத்தில் நடித்ததன் மூலமாக தேசிய விருதினையும் வென்றிருக்கின்றார். 


அத்தோடு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெயரும் புகழும் பெற்றார். அதன் பிறகு தன்னுடைய சொந்த விடயங்களிற்காக சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்து விட்டு, இப்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கின்றார். 


அதாவது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து தற்போது நடிக்கிறார். அந்தவகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்தில் ப்ரியாமணியும் இருக்கிறார். இதில் அரசியல்வாதியாக அவர் நடிப்பது மட்டும் இல்லாமல், இடைவேளைக்கு பிறகு ப்ரியாமணி முதல் மந்திரி ஆவதுபோல் திரைக்கதை அமைந்து இருக்கின்றதாம். 


மேலும் பெண் முதல்வரால் ஆண்கள் செய்ய முடியாததை செய்து காட்ட முடியும், மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய முடியும் என்று ஒரு விறுவிறுப்பான கதையம்சம் கொண்டதாக அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்து உள்ளார்களாம். இவ்வாறாக இப்படத்தில் அரசியல் வாதி, முதல் மந்திரி என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ப்ரியாமணிக்கு அதிர்ஷ்டம் அடித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement