• Jul 25 2025

அம்மாவுக்கு 14 வயசா? இல்லை பொண்ணுக்கு 14 வயசான்னே தெரியலையே- இளைய மகளின் பிறந்தநாளை சூப்பராகக் கொண்டாடிய வனிதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கும் நடிகை மஞ்சுளாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வனிதா விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.  நடிகர் ஆகாஷை 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட வனிதா விஜயகுமார் 2007ம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்தார். நடிகர் ஆகாஷ் உடன் ஒரு மகன் மற்றும் மகளை பெற்றுக் கொண்டார் வனிதா .

அதே 2007ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் வனிதா விஜயகுமார். ஆனந்த் ஜெய் ராஜனுக்கும் வனிதா விஜயகுமாருக்கு பிறந்த மகள் தான் ஜெனித்தா ராஜன்.


ஆனந்த் ஜெய் ராஜனையும் 2012ம் ஆண்டு விவகாரத்து செய்து பிரிந்த வனிதா விஜயகுமார் தனது இரு மகள்களையும் தன்னுடன் வைத்திருக்க விரும்பினார். ஆனால், தனது மகளை ஆனந்த் ஜெய் ராஜன் கோர்டில் வழக்கு தொடர்ந்து தன்னிடமே வைத்திருக்கும் வகையில் செய்து விட்டார். அந்த இரண்டாவது மகளுக்குத் தான் தற்போது 14வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் .


வனிதாவின் மூத்த மகன் அப்பா ஆகாஷ் உடன் இருந்து வரும் நிலையில், மூத்த மகள் ஜோவிகா அம்மா வனிதாவுடன் வசித்து வருகிறார். 2வது கணவருக்கு பிறந்த மகள் தந்தையுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தாலும் அடிக்கடி தனது மகளை சென்று சந்தித்து அவருடன் நேரத்தை செலவிட்டு வரும் வனிதா விஜயகுமார் தற்போது 2வது மகள் ஜெனிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.


 இரு மகள்களுடன் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு என போஸ்ட் போட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். வனிதா விஜயகுமாரின் இளைய மகள் 14வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், வனிதாவின் ரசிகர்கள் பலரும் அந்த குட்டி பொண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


இன்னொரு இன்ஸ்டா போஸ்ட்டில் செம டைட்டான கவர்ச்சி ஆடையை அணிந்து கொண்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். அதை பார்த்த ரசிகர்கள் அம்மாவுக்கு 14 வயசா? இல்லை பொண்ணுக்கு 14 வயசான்னே தெரியலையே என கலாய்த்து ஜாலியாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement