• Jul 26 2025

மறக்கிறது ரொம்பக் கஷ்டம்... அழகாய் பிறந்தது என் தப்பா..? கலங்கிய கண்களுடன் சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் சனம் ஷெட்டி. இதற்கு முதல் இவர் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்குபற்றிய தர்ஷனுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.


இருப்பினும் அவருடனான காதலை முறித்துவிட்டு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த ஷோ மூலமாக அவருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது. இதனால் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார். பின்னர் படவாய்ப்புப் பெற்று படங்களில் நடித்து வருகின்றார்..


இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தற்போது ஒரு ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் "என்னை மறக்கணும் என்பது உனக்கு கஷ்டமான விஷயம் என்று எனக்குத் தெரியும், அழகாய் பிறந்தது என் தப்பா" எனக் கூறும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருக்கின்றது. அதற்கு கண் கலங்கியவாறு சனம் ஷெட்டி ரியாக்ஷன் கொடுத்திருக்கின்றார்.

இதோ அந்த வீடியோ..! 


Advertisement

Advertisement