• Jul 25 2025

சானியா மிர்சா கணவருக்கும் ஆயிஷாவிற்கும் அப்படி ஒரு தொடர்பா..? இதோ அவரே கூறிய உண்மைத் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 2018இல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சானியா. 


இந்நிலையில் சானியாவுக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே சில காரணங்களால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. அதாவது இனியும் சேர்ந்து வாழ முடியாது என்கிற முடிவுக்கு சானியா மிர்சாவும், சோயப் மாலிக்கும் வந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை பெரிதானதும் சானியாவும், சோயப் மாலிக்கும் தற்போது தனித் தனியாக வசித்து வருகிறார்கள். மேலும் சோயப்பின் கள்ளத்தொடர்பால் தான் இந்தப் பிரச்சனை ஆரம்பம் ஆனது எனவும் தகவல் வெளியானது.


அதாவது சோயப் மாலிக்கிற்கும், பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஆயிஷா உமருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏறப்பட்டதாக பலராலும் பேசப்பட்டது. ஆயிஷாவால் தான் சானியா, சோயப் இடையே அடிக்கடி சண்டை , மற்றும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த சானியா மிர்சாவின் ரசிகர்களோ, ஆயிஷா உமரை சமூக வலைதளங்களில் பலவாறு விளாசினார்கள். 


இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆயிஷா உமா. அதாவது சோயப் மாலிக் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிஒன்றில் அண்மையில் கலந்து கொண்டிருந்தார் ஆயிஷா உமர். அந்த நிகழ்ச்சியில் வைத்துத் தான் சோயப் மாலிக்குடனான தொடர்பு குறித்து ஆயிஷாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில் "திருமணமான ஆண் அல்லது கமிட் ஆன ஆளுடன் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். என்னை பற்றி அனைவருக்கும் தெரியும்" என்றார். மேலும் சோயப் மாலிக்கும், ஆயிஷா உமரும் சேர்ந்து எடுத்த ஹாட் போட்டோஷூட்டால் தான் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு என பேச்சு கிளம்பியது. 


இது குறித்து ஆயிஷா பதிலளிக்கையில் "எங்களை பற்றிய வதந்தியை அடுத்த நாடு மீடியா தான் பரப்பிவிட்டது. அதன் பிறகே என் நாட்டு மீடியா அதை பிடித்துக் கொண்டது" என்றார்.

இத்தனை காலமும் சோயப் மாலிக்கும், சானியா மிர்சாவும் துபாயில் வசித்து வந்திருந்தனர். இந்நிலையில் சோயபுடன் சேர்ந்து இருந்த வீட்டில் இருந்து தற்போது சானியா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement